முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர் மாற்றம்...

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர் மாற்றம்...

Tirupati | திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவதில் புதிய மாற்றங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 • 14

  திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர் மாற்றம்...

  திருப்பதி கோவிலில் ஏழுமலையானை இலவச தரிசனம் மூலம் வழிபட வரும் பக்தர்களுக்கு இதுவரை திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம், ஸ்ரீனிவாசம் கட்டிட வளாகம் மற்றும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி கட்டிட வளாகம் ஆகிய இடங்களில் தினமும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

  MORE
  GALLERIES

 • 24

  திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர் மாற்றம்...

  இந்த நிலையில் இன்று முதல் பூதேவி கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வந்த கவுண்டர்களை திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாஸம் கட்டிட வளாகத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர் மாற்றம்...

  அதேபோல் இன்று முதல் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி வளாகத்தில் திருமலைக்கு அலிப்பிரி நடைபாதை மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதை ஆகிய வழிகளில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் கவுண்டர் மாற்றம்...

  திருப்பதிக்கு வந்து மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி வளாகத்தில் டோக்கன்களை வாங்கி செல்லும் பக்தர்கள் நடைபாதைகளில் செல்லும்போது நடுவழியில் அவற்றின் மீது சீல் இடப்படும்.சீல்லிடப்பட்ட டோக்கன்களை கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  MORE
  GALLERIES