முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

Tirupati | திருப்பதியில் தமிழ்நாட்டை சேர்ந்த 1008 மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஆகியோர் உள்ளிட்டோருக்கு அறக்கட்டளை நிதி உதவியுடன் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 • 16

  திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

  யை சேர்ந்த ராஜஸ்தான் யூத் மெட்ரோ மற்றும் புட் பேங்க் ஆகிய அறக்கட்டளைகளின் நிதி உதவியுடன் சென்னையை சேர்ந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய பிரிவுகள் ஆகியவற்றை சேர்ந்த 1008 பேர் இன்று திருப்பதி ஏழுமலையானை 300 ரூபாய் தரிசனம் மூலம் வழிபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 26

  திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

  சென்னையை சேர்ந்த ராஜஸ்தான் யூத் மெட்ரோ மற்றும் புட் பேங்க் ஆகிய அறக்கட்டளைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஆதரவற்றோர், பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு உதவிகளை செய்து வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 36

  திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

  இந்த ஆண்டு 1008 பேருக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்க முடிவு செய்த அறக்கட்டளைகள் இதற்காக தேவஸ்தானத்தின் சென்னை மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் சேகர் ரெட்டி உதவியை நாடினர்.

  MORE
  GALLERIES

 • 46

  திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

  அதற்கு, அவர் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க முன்வந்த நிலையில் 1008 பேர் இன்று காலை சென்னையில் இருந்து ரயில் மூலம் ரேணிகுண்டா அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து பேருந்துகள் மூலம் 1008 பேரும் திருப்பதி மலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  MORE
  GALLERIES

 • 56

  திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

  தொடர்ந்து 300 ரூபாய் தரிசனம் மூலம் சேகர் ரெட்டி ஆயிரம் பேரையும் கோவிலுக்குள் அழைத்து சென்றார். இதற்கான மொத்த செலவுகளையும் இரண்டு அறக்கட்டளைகளையும் ஏற்று கொண்டன. சாமி தரிசனத்திற்கு பின் தேவஸ்தானம் சார்பில் அனைவருக்கும் லட்டு பிரசாதம், இலவச உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 66

  திருப்பதியில் ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் என 1008 பேர் சிறப்பு தரிசனத்தில் அனுமதி..!

  பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சேகர் ரெட்டி அடுத்த மாதம் மூத்த குடிமக்கள் ஆயிரம் பேர் திருப்பதி மலைக்கு சாமி கும்பிடுவதற்காக அழைத்து வரப்பட உள்ளனர் என்று தெரிவித்தார்.

  MORE
  GALLERIES