கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்கு உள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்றது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. வாகன சேவையை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சர்வ திருவாபரணங்களை தரித்து பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தீப, தூப, நைவேத்திய சமர்ப்பணம் உற்சவருக்கு நடைபெற்றது. கோவிலுக்கு உள்ளேயே நடைபெற்ற பெரிய சேஷ வாகன சேவையில் தேவஸ்தான ஜீயர்கள் அறங்காவலர் குழுவினர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பெற்றனர்.