முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அதை கருத்தில் கொண்டு பக்தர்கள் தாங்கள் திருப்பதி பயணத் திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • 15

    திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

    தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் ஆகையால் திருப்பதி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

    இதனால் இன்று இரவு நிலவரப்படி இலவச தரிசனத்திற்கு சுமார் 50 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 300 ரூபாய் தரிசனத்திற்கு 5 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் வாங்கிய பக்தர்கள், திருப்பதியில் இருந்து பாதயாத்திரை ஆக சென்று திவ்யதர்சன டோக்கன்கள் வாங்கிய பக்தர்கள் ஆகியோர் இலவச தரிசனத்திற்காக சுமார் ஆறு மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

    இந்த நிலையில் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவை இல்லாமல் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு உள்ள இரண்டு வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பி சாமி தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 8 கிலோமீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே காத்து கொண்டிருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

    அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி ஆகிய அத்யாவசிய தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. மேலும், பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு...!

    தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அதை கருத்தில் கொண்டு பக்தர்கள் தாங்கள் திருப்பதி பயணத் திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வரிசையில் பொறுமையாக காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES