திருச்சூர் அருகே உள்ள ஆராட்டுப்புழா சாஸ்தா திருக்கோயில் பூரம் மற்ற எல்லா பூரங்களின் தாயாகவும் கருதப்படுகிறது. அத்தகைய பூரம் விழா ஆராட்டுபுழாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மார்ச் 16ஆம் தேதி 2022 மாலை தொடங்கி சாஸ்தா கோயில் பூரம் மைதானத்தில் விழா களை கட்டத் தொடங்கியது. மாலை 6 மணி தொடங்கி வரிசையாக பல பகுதிகளில் இருந்தும் யானைகள் வரத் தொடங்கின.