பஞ்சவாத்தியத்துடன் மடம் வருகை, மதியம் பாரமேகாவு கோவிலுக்கு ஊர்வலம், ஒரு மணி நேர செம்பட மேளம், இளஞ்சித்தறமேளம், தெக்கோட்டிறக்கம், பாறமேக்காவு பகவதி மற்றும் திருவம்பாடி பகவதியின் நேருக்கு நேர் திருக்காட்சி, குடமாற்றம், மாலையில் சிறு வானவேடிக்கை, இரவு நேர பஞ்சவாத்தியம் ஆகியவற்றை திருவிழாவின் முக்கிய சடங்குகள் மற்றும் ஆசார முறைகள் ஆகும்.
இந்நிலையில் சொவ்வாய்கிழமை திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் இருந்து சாமி சிலையுடன் சிவக்குமார் என்ற யானை கோவில் முன் பகுதி வழியாக வெளியேறி, ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் துவங்கி 6 - மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் புதன் கிழமையான இன்று காலையில் பூரம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.