சனி நீதியின் கடவுள் என அழைக்கப்படுபவர். இவரின் ஒவ்வொரு செயலும் நம்மக்கு ஒவ்வொரு பலனை கொடுக்கும். எனவே தான், சனியின் பெயர்ச்சி, சனியின் அஸ்தமனம் அல்லது சனியின் எழுச்சி ஆகியவை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜனவரி 17 ஆம் தேதி, சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைந்தார். இதன்பிறகு, ஜனவரி 30-ம் தேதி கும்ப ராசியில் அஸ்தமித்த சனி, தற்போது மார்ச் 5 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.38 மணிக்கு கும்ப ராசியில் உதிக்கப் போகிறார். மூல திரிகோணமான கும்பத்தில் சனியின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். சனி உதயத்தால் இவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும். அதனால் தான் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
கும்ப ராசியில் சனியுடன் சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் இணைய உள்ளது. இதனால், சனி பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களை கொடுக்க முடியாது. ரிஷபம், கன்னி உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் பலன் கிடைப்பதற்குப் பதிலாக கெட்ட விஷயங்கள் நிகழலாம். சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம் : ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலங்களில், முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், மற்றவர்களை அதிகமாக நம்பும் போது கவனமாக இருக்கவும். சில சமயங்களில் தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். இதனால், நீங்கள் சற்று கவலையாக உணர்வீர்கள். பணியிடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை குறையலாம். இதனால், வேலையை முடிப்பதில் சிக்கல் ஏற்படும்.
கன்னி : சனியின் உதயம் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால், சனியின் உதயத்தால் நீங்கள் அதிக பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். நீங்கள் பேசும் வார்த்தை மீது கவனமாக இருக்கவும். இல்லையெனில், வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில் அல்லது சொத்து சம்மந்தமாக ஏதாவது திட்டமிடுகிறீர்கள் என்றால், அதை தற்காலிகமாக ஒத்திவைப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பேணுவது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் கலவையான பலனை அளிக்கப் போகிறது. இந்த நேரத்தில், பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். ஆனால், அன்புக்குரியவரால் உங்கள் வேலை தடைபடலாம். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் உதயத்தால் உங்கள் சகோதரர்களுடன் ஏதாவது தகராறு ஏற்படலாம். மேலும், திருமண வாழ்க்கையில் இருந்த அமைதி குறையும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மகரம் : சனி உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்திற்கு உயரப் போகிறார். இந்த நேரத்தில், தொழில் வாழ்க்கையில் சற்று பதற்றம் காணப்படும். இதனால், குடும்பச் சூழல் கொஞ்சம் மோசமாக இருக்கலாம். உங்கள் தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம். எந்த விஷயத்தையும் அமைதியாக யோசித்து செய்வது நல்லது. உங்கள் வார்த்தை மீதி அதிக கவனம் வைக்கவும். வெளியில் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான செலவுகளை குறைப்பது நல்லது.
மீனம் : சனி உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார். இதனால், காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்விலும் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசுவது நல்லது. இந்த காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பாட்னர்ஷிப் மூலம் தொழில் செய்பவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இதனால், வியாபாரம் எதிர்மறையாக பாதிக்கப்படும். வீடு சம்மந்தமான செலவுகள் அதிகரிக்கும். எனவே, தேவையற்ற செலவுகளை குறைக்கவும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனம் குழப்பமாகவே காணப்படும். எனவே, அனைத்து விஷயத்தையும் சிந்தித்து செய்வது நல்லது.