சிவராத்திரியில் உருவாகும் 3 ராஜ யோகம் : குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் இருக்கும் போது, ஹம்ஸ யோகம் உருவாகும். இதையடுத்து, சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெறுவதால் மாளவ்ய யோகம் உருவாகிறது. மேலும், சனி பகவான் கும்பத்தில் ராசி அதிபதியாக இருப்பதால், சச யோகம் உருவாகிறது. இந்த மூன்று ராஜயோகங்களால் சில ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மேஷம் : மகா சிவராத்திரி அன்றும் அதன் பிறகும் மேஷ ராசியினருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. உங்களுக்கு சிவனின் முழு அருளும் கிடைப்பதுடன், தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பதற்கான சூழலும் ஏற்படும். நீங்கள் நினைக்கும் அனைத்து விஷயங்களும் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். ஈசனின் அருளை முழுமையாக பெற இன்று சிவபெருமானுக்கு கங்கை நீரால் ஜலாபிஷேகம் செய்யவும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் சிவராத்திரி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் உங்களின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். அதுமட்டும் அல்ல, வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழில் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பான வெற்றியை உங்களுக்கு தரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சில் இருக்கும் கனிவால் குடும்பத்திலும், பணியிடத்திலும் பாராட்டு பெறுவீர்கள்.
விருச்சிகம் : சிவபெருமானின் அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சுமுகமாக உறவு ஏற்படும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும் மற்றும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சிவபெருமானின் அருளால் உங்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்வதால் நல்ல பலன் பெறுவீர்கள்.
மகரம் : சனிப்பிரதோஷம் கூடிய மகாசிவராத்திரி மகர ராசியினருக்கு உங்களுக்கு மிகவும் சிறப்பான இருக்க போகிறது. சிவனுக்கு பாலாபிஷேகம் செய்வதால் மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும். கணவன் - மனைவிக்கு இடையிலான அன்பு அதிகரிக்கும். மகா சிவராத்திரி விரதம் இருப்பதால் சனி தோஷத்திலிருந்து விலகக்கூடிய நற்பலனை பெறலாம். அதுமட்டும் இல்லை, குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.
கும்பம் : இந்த மகா சிவராத்திரி அற்புத தினத்தில் கும்ப ராசியினருக்கு சிவ பெருமானின் அருள் கிடைப்பதோடு, உங்கள் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி, குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் வேலையில் சாதகமாக காலமாகவும், அற்புத பலனும் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு பால் மற்றும் கரும்பு சாறு அபிஷேகம் செய்ய வேண்டும்.