முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

மிதுனம் மற்றும் கன்னி ராசி அதிபதியான புதன் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி ஆக உள்ளார். வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அப்படி ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 • 16

  புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

  ஒவ்வொரு கிரகணமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்து கொண்டே இருக்கும். ஆனால், சில கிரகங்கள் மட்டுமே அதிசாரம் அல்லது வக்ர பெயர்ச்சி அடையும். எனவே தான் ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதன் பகவான் ஏப்ரல் 21 ஆம் தேதி மேஷ ராசியிலேயே வக்ர பெயர்ச்சி செய்ய உள்ளது. இதனால், சில ராசியினருக்கு தொழில், வேலை, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எந்தெந்த ராசியினருக்கு புதனின் யோக பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

  மேஷத்திற்கான புதன் வக்ர பெயர்ச்சி பலன் : மேஷ ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாவதோடு, புதனின் இந்த வக்ர நிலையால் வாழ்க்கையில் சாதகமான பலன்களை மேஷ ராசிக்காரர்கள் பெறுவார்கள். தொழில், வேலையில் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஏற்கனவே வேளையில் இருப்பவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல சலுகைகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இருப்பினும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

  MORE
  GALLERIES

 • 36

  புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

  மிதுனத்திற்கான புத வக்ர பெயர்ச்சி பலன் : மிதுன ராசி அதிபதியான புதன் வக்ர பெயர்ச்சி அடையக்கூடிய காலத்தில், இதுவரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த தடைகள் நீங்கி வெற்றி பெற புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பால் முன்னேற்றம் அடைவீர்கள். அலுவலகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் முன்பை விட செலவு அதிகரிக்க வாய்ப்பு அதிகம். புதிய வீடு, வாகனம் வாங்க சாதக காலம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

  சிம்மத்திற்கான புத வக்ர பெயர்ச்சி பலன்கள் : புதனின் வக்கிர பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு சாதகமானதாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும். தொழிலில் மகத்துவமான வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்களின் நிதி நிலைமை மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அன்பும், ஆதரவும் கிடைக்கும். காதலில் புரிதல் நன்றாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

  கும்பத்திற்கான புத வக்ர பெயர்ச்சி பலன் : கும்ப ராசிக்கு 3 ஆம் வீட்டில் புதன் பகவானின் வக்ர நிலை பல விதத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்வில் ஒரு மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் திட்டத்தில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயமும் பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  புதன் வக்ர பெயர்ச்சி : பதவி உயர்வு, பண வரவு என அடி தூள் கிளப்ப போகும் 5 ராசிகள்!

  மீனத்திற்கான புத வக்ர பெயர்ச்சி பலன்கள் : புதனின் வக்கிர பெயர்ச்சி மீன ராசிக்கு பல விதத்தில் மேன்மை தரக்கூடியதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கு சாதகமான பலனும், நற்பெயரும் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை வாய்ப்புக்கான வாய்ப்பு தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். ஆரோக்கியம் மேம்படும். அதே சமயம் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. எனவே, வீண் செலவு செய்வதை குறைப்பது நல்லது.

  MORE
  GALLERIES