விநாயகர் அனைத்து கடவுள்களிலும் முதன்மையான கடவுளாக கருதப்படுகிறார். அவர் சித்தி புத்தியின் கடவுள். பக்தர்களின் வலியை நீக்கும் ஆனைமுகன் இவர். வாரத்தின் மூன்றாவது நாளான புதன் அன்று விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து சாஸ்திரத்தின்படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்தை வணங்குவதற்கான நாள். புதன் விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாட்டால் அவர் மகிழ்ச்சியடைந்து பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
அருகம்புல்: அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நன்மை தரும். விநாயகருக்கு துர்வா என்றால் மிகவும் பிடிக்கும். விநாயகருக்கு அருகம்புல்லை அர்ப்பணம் செய்யும் மரபு மிகவும் பழமையானது. கணபதி அருகம்புல்லை மிகவும் விரும்புவதாக நம்பப்படுகிறது.
வாழைப்பழம்: வாழைப்பழம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது. வாழைப்பழத்தை எப்போதும் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். வாழைப்பழத்தை எப்போதும் ஜோடியாகதான் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இது தவிர மற்ற பழங்களையும் பூஜையில் வைக்கலாம்.இதனால் கேட்டதை வழங்கிடுவார் விநாயகர் என்பது ஐதீகம்.