மேஷம்.. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் சிறப்பு அருள்புரிவார். செவ்வாய் கிரகம் சிவனின் பாகமாக கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, அந்தகாசுரு என்ற அரக்கனுடன் போரிடும்போது, சிவனின் வியர்வைத் துளி தரையில் பட்டது. அதன் பிறகுதான் செவ்வாய் வெளிப்பட்டது. மேஷ ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி அன்று அனைத்து முறைப்படியும் சிவனை வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு கங்கை நீர் மற்றும் பசுவின் பால் வழங்குவது அவர்களின் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மகரம்.. மகர ராசிக்கு அதிபதி சனி. சனி பகவான் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பக்தர்களில் ஒருவர். எனவே மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் மகாதேவரிடம் சிறப்பான ஆசிகள் கிடைக்கும். இவர்கள் சிவனை வழிபட வில்வ இலை, கங்கை நீர், பசும்பால் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அதனால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்...