முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

Ningaloo solar eclipse 2023 : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் சுமார் 5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடிக்கும். இது ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மைறையான விளைவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

 • 17

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20, வியாழன் அன்று நிகழ உள்ளது. இது ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணத்தின் போது, சூரியன் மேஷ ராசியில் இருக்கும். சூரிய கிரகணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, குருவின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களை ஏற்படுத்தினாலும், சிலருக்கு அசுப பலன்கள் ஏற்படும். இந்த கிரகணம், இந்தியாவில் தென்படாது. இது பெரும்பாலும் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெரியும்.

  MORE
  GALLERIES

 • 27

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  சூரிய கிரகண நேரம் : இந்திய நேரப்படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 07.05 மணிக்கு தொடங்கும். சூரிய கிரகணம் 08.07 மணிக்கு ஆரம்பமாகும். சூரிய கிரகணத்தின் நடுப்பகுதி காலை 09:47 மணிக்கு நிகழும். இதையடுத்து, மதியம் 12.29 மணிக்கு கிரகணம் முடியும். சூரிய கிரகணத்தின் மொத்த கால அளவு 5 மணி 24 நிமிடங்கள். இவ்வளவு நீண்ட சூரிய கிரகணம் மற்றும் சூரியன் அதன் சொந்த ராசியான மேஷ ராசியில் இருப்பதால் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  மேஷ ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம் : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தும். சூரியன் மேஷத்தில் இருக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படும். சூரிய கிரகணத்தின் பாதகமான பலன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட பயணத்தை தவிர்ப்பது நல்லது. கிரகணத்திற்குப் பிறகு, நீங்கள் நிதி விஷயங்களிலும் தொழிலிலும் சிக்கல்களைச் சந்திப்பீர்கள். அதிகாரிகளிடம் அதிருப்தி, எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்காததால் மனநோய்களையும் சந்திக்க நேரிடும். உங்கள் ராசிக்கு வியாழன் வருகையால் உங்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும், மேலும் நீங்கள் வாழ்க்கையில் சமநிலையுடன் இருப்பீர்கள்.

  MORE
  GALLERIES

 • 47

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  சிம்ம ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம் : சூரிய கிரகணத்தின் போது, ​​சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாமிடத்தில் இருக்கிறார். கிரகணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, வியாழன் உங்கள் அதிர்ஷ்ட ஸ்தானத்திற்கு நகர்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கும். நீங்கள் அடுத்த 2 மாதங்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டும். கல்வி, உத்தியோகத்தில் சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் இறுதியில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதோடு நன்மைகளையும் பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  கன்னி ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம் : 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து எட்டாவது வீட்டில் நிகழும். அப்படிப்பட்ட நிலையில் இந்த சூரிய கிரகணம் கன்னி ராசியினருக்கு மிகுந்த உற்சாகத்தை தரும். இந்த ராசிக்காரர்கள் பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொருட்களை இழக்கவோ அல்லது சிக்கலில் சிக்கவோ வாய்ப்பு உள்ளது. உங்களின் தவறான பழக்கவழக்கங்களால் நஷ்டமும் ஏற்படலாம். இது போன்ற சில சூழ்நிலைகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் மற்றும் நீங்கள் சேமித்த பணத்தில் இருந்து செலவழிக்க வேண்டியிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  விருச்சிக ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம் : சூரிய கிரகணம் விருச்சிக ராசியில் இருந்து ஆறாவது வீட்டில் நடக்கிறது. எனவே, எதிரிகளின் தொல்லையை அனுபவிப்பார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். எனவே, உங்கள் வேலையில்  கவனம் செலுத்துங்கள். இந்த சூரிய கிரகணம் ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்களுக்கு சாதகமாக இல்லை. சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதால், உணவு மற்றும் பானங்களில் கவனமாக இருக்க வேண்டும். காயம் மற்றும் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால், வெளியில் கடன்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 77

  Surya Grahan 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்..!

  மகர ராசியில் சூரிய கிரகணத்தின் தாக்கம் : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை. மகர ராசியிலிருந்து நான்காவது வீட்டில் சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் தாயின் உடல்நிலை குறித்து கவலைப்படலாம். வீண் செலவுகள் ஏற்படும். மகிழ்ச்சியின்மையை அனுபவிப்பீர்கள். வேலை தொடர்பான மன அழுத்தம் உங்களை தொந்தரவு செய்யலாம். உங்களுக்கு இதயம், இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், உங்கள் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய, நீங்கள் பலன் பெறுவீர்கள்.

  MORE
  GALLERIES