முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

surya grahan 2023 in india date and time | ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில், சூரிய பகவானின் அருளால் சில ராசியினருக்கு திடீர் பணவரவு கிடைக்கும். அந்த பட்டியலில் உங்களது ராசி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

 • 17

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  இந்து பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி (சித்திரை 7) வைசாக் அமாவாசை திதியில் நிகழ்கிறது. இந்த கிரகணம் காலை 7:04 மணிக்கு துவங்கி மதியம் 12:29 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. எனவே, கிரகண சூதக காலம் இந்தியர்களுக்கு செல்லாது. இருப்பினும், சூரிய கிரகண நாளில் சில சுப யோகங்கள் உருவாகும். இந்த நேரத்தில் மேஷ ராசியில் சூரியன் புதனுடன் இணைவதால் சர்வார்த்த சித்தி யோகம், புதாதித்ய யோகம், ஹம்ச யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்களை உருவாக்கும். கிரகணத்தின் போது சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 27

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  பொதுவாக கிரகண நேரம் அசுபமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் சில சுப யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். சூரிய கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் நல்ல பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். இது உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை நீங்கள் வெளிக்கொண்டு வருவீர்கள். சமூக மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்பது சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கும். நீங்கள் சில சிறந்த நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் குடும்பச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  கடகம் : கடக்க ராசிக்கு இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் சாதகமான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் பெற்றோருடன் சில சிறப்பு இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் நீங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆளுமை திறம் அதிகமாக மேம்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். சில புதிய நபர்களை சந்திப்பீர்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  சிம்மம் : சூரிய கிரகணத்தின் போது சிம்ம ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்களின் கலவித்திரம் மேம்படும். உங்கள் காதல் வாழ்க்கையில் நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் பங்குதாரர் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் சந்திக்கலாம். நீங்கள் மனமகிழ்ச்சியாக உணர்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால், உங்களின் நிதி நிலைமை மேம்படும். சுப கிரகங்களால் புதிய வருமானத்திற்கான ஆதாயம் அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  தனுசு : தனுசு ராசிக்கார்களுக்கு இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவு இருக்கும். இந்த காலகட்டத்தில் அரசின் திட்டங்களால் ஆதாயம் அடைவீர்கள். இதனால் உங்கள் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும். வீட்டுச் செலவுகளில் கவனமாக இருங்கள். நிதி ரீதியாக இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் இணைந்து எதிர்காலத் திட்டங்களைச் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  Surya Grahan April 2023 : சூரிய கிரகணத்தின் போது இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டம் கிடைக்கும்!

  கும்பம் : கும்ப ராசிக்கு சூரிய கிரகணத்தின் போது சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

  MORE
  GALLERIES