நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்படி, சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் காணப்படும். இந்நிலையில், மேஷ ராசியில் பயணித்து வரும் சூரியன் மே 15 ஆம் தேதி காலை 11.32 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறியுள்ளார். இவர் ஜூன் 15 ஆம் தேதி வரை ரிஷப ராசியிலேயே இருப்பார். அதன் பின், புதனை அதிபதியாக கொண்ட மிதுனத்திற்கு செல்வார்.
சூரியன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் நுழையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்தவகையில், இந்த சூரிய பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். மே 15 ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவதால் எந்த ராசிக்காரர்கள் சுப பலனைப் பெறப் போகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
ரிஷபம் : சூரியன் உங்களின் சொந்த ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், உங்களின் கவனம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது அதிக அக்கறை செலுத்துவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும்.
கடகம் : கடகத்தின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். குழந்தைகளால் நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம் : சிம்மத்தின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் நிலை வலுபெறும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளன. சமூகத்தில் பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம் : மகரத்தின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் மிகவும் அன்பாக இருப்பீர்கள். மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும்.