முகப்பு » புகைப்பட செய்தி » 65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

Surya Gochar 2023 zodiac effects : சூரியபகவான் ஜூன் 15 ஆம் தேதி தனது ராசியை மாற்றப் போகிறார். அதாவது, ஜூன் 15 மாலை 06:29 மணிக்கு மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி செய்ய உள்ளார். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் மேஷம், சிம்மம், கன்னி, கும்பம் ஆகிய 4 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. சூரியனின் சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை பெறப்போகிறார்கள் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • 16

    65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

    ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். அந்தவகையில், 365 நாட்களுக்குப் பிறகு சூரியன் தனது ராசியை மாற்ற உள்ளார். வரும் ஜூன் மாதம் மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார். மிதுன ராசியில் சூரியனின் பெயர்ச்சி 1 வருடத்திற்கு பிறகு நடைபெறுகிறது. ஜூன் 15 ஆம் தேதி மாலை 06.29 மணிக்கு சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் 32 நாட்கள் தங்கிய பிறகு, சூரியன் மீண்டும் தனது ராசியை மாற்றுவார்.

    MORE
    GALLERIES

  • 26

    65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

    ஜூலை 17 ஆம் தேதி காலை 05:19 மணிக்கு சூரியன் மிதுன ராசியிலிருந்து விலகி கடக ராசிக்கு மாறுகிறார். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதனால், உங்களுக்கு மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். சூரியனின் சஞ்சாரத்தினால் சாதகமான பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

    மேஷம் : மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் வலிமையும் தைரியமும் அதிகரிக்கும். அதே போல, ஆளுமையும் மேம்படும். பணப் பற்றாக்குறை இருக்காது, பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் அரசாங்கத்திடம் இருந்து சில உதவிகளைப் பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

    சிம்மம் : உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன். உங்களின் மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பம் முன்னேறும். காதல் வாழ்க்கைக்கு நேரம் சற்று இடையூறாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை மீண்டும் பாதையில் கொண்டு வர முயற்சிப்பீர்கள்.

    MORE
    GALLERIES

  • 56

    65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

    கன்னி : மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் வேலையில் வெற்றியைத் தரும். ஜூன் 15 முதல் ஜூலை 17 வரையிலான நேரம் உங்கள் வேலை அல்லது வியாபாரத்திற்கு மிகவும் நல்லது. வேலை செய்பவர்கள் பெரிய பதவியைப் பெறலாம் அல்லது பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். உங்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கும் இது மிகவும் சிறந்த காலம். வேலையில் முன்னேற்றமும், லாபமும் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    65 நாட்களுக்குப் பிறகு மிதுனத்தில் சூரியன்… இந்த நான்கு ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!

    கும்பம் : சனியின் ராசியான கும்பத்திற்கு சூரியனின் சஞ்சாரம் நல்ல பலனளிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் சில புதிய வேலைகளை செய்ய விரும்பினால், நீங்கள் வெற்றி பெறலாம். கல்விப் போட்டியுடன் தொடர்புடையவர்கள் கவனத்துடன் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். தற்போது உங்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும், வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும், இது பொருளாதார நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும்.

    MORE
    GALLERIES