ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று சூரிய பகவான் தனது ராசியை மாற்றியுள்ளார். இந்த நாளில் சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைவார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைவதால் இன்று மேஷ சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியபகவான் ராசி மாறியவுடன் சில ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். சூரியனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தர போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்..
மேஷம்: சூரிய பகவான் மாற்றத்தினால் மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளினால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.