முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

sun rahu conjunction | ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசியில் ராகு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. ராகு சூரிய சேர்க்கையானது சற்று பிரச்னைகளைத் தரும். அதனால் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 • 15

  சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

  கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு. இந்நிலையில் மேஷ ராசியில் ஏற்கனவே ராகு இருந்து வருகிறார். இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியனும் மேஷ ராசிக்குள் செல்கிறார்.

  MORE
  GALLERIES

 • 25

  சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

  ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசியில் ராகு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. ராகு சூரிய சேர்க்கையானது சற்று பிரச்னைகளைத் தரும். குறிப்பாக ஆரோக்கிய பிரச்னைகளால் அவதிப்பட வைக்கும். இது தவிர வாழ்விலும் பலவிதமான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது மேஷ ராசியில் ராகு மற்றும் சூரியன் ஒன்றாக பயணிப்பதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 35

  சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

  கன்னி : கன்னி ராசியின் 8வது வீட்டில் இந்த ராகு சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்னைகளால் அவதிப்படலாம். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் மோசமாகக்கூடும். மேலும் வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 45

  சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

  விருச்சிகம் : விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் பல விஷயங்களில் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்கலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. ஆனால்  உங்கள் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் எந்த ஒரு புதிய விஷயங்களையும் தொடங்காதீர்கள். சற்று தள்ளி போடுவது நல்லது. இல்லாவிட்டால், இழப்பு அல்லது தோல்வியை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் பட்ஜெட் பாதிக்கப்படலாம்.

  MORE
  GALLERIES

 • 55

  சூரிய பெயர்ச்சி 2023... ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசியினர் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!

  கும்பம் : கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்கால கட்டத்தில் தோள்பட்டை மற்றும் மூட்டு தொடர்பான பிரச்னையால் அவதிப்பட வாய்ப்புள்ளது. நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் இக்காலத்தில் சற்று குறைவான லாபத்தையே பெறக்கூடும். இக்காலகட்டத்தில் உங்களின் எதிரிகள் வலிமையானவர்களாக, உங்கள் வீழ்த்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இக்காலத்தில் தேவையில்லாத பயணம் செலவு செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படும். இதனால் உங்களின் கையில் பணம் இல்லாமல் போகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். ஆனால் இந்த காலத்தில் எந்த முதலீடுகளையும் செய்துவிடாதீர்கள். கவனமாக இருங்கள்.

  MORE
  GALLERIES