கிரகங்களின் இயக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் இணைவதால் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்தவகையில், மேஷ ராசியில் ராகு மற்றும் சூரியன் இணைவதால், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களை பெற உள்ளனர். ஏற்கனவே ராகு மேஷ ராசியில் உள்ளார். இதையடுத்து, ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். ராகு சூரிய சேர்க்கையானது சற்று பிரச்சனைகளைத் தரும் சூழ்நிலைகளை உருவாக்கும். மேஷ ராசியில் ராகு மற்றும் சூரியன் ஒன்றாக பயணிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம்.
கன்னி : கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியம் மற்றும் ராகு இணைவதால், உங்களுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் மோசமாகலாம். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதே போல, வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இதனால், விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
விருச்சிகம் : விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் - ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால், இக்காலத்தில் பல விஷயங்களில் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் எந்த ஒரு புதிய விஷயங்களையும் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால், இழப்பு அல்லது தோல்வியை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.
கும்பம் : கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு மற்றும் சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால், இக்கால கட்டத்தில் தோள்பட்டை மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட வாய்ப்புள்ளது. நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் இக்காலத்தில் சற்று குறைவான லாபத்தையே பெறக்கூடும். தேவையில்லாத பயணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. வீண் செலவுகள் உருவாகும்.