முகப்பு » புகைப்பட செய்தி » கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி செய்வதை மேஷ சங்கராந்தி என அழைக்கின்றனர். இதையே சித்திரை வருடப்பிறப்பாகவும் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் இன்று, சூரிய குபேர யோகமும் உருவாகிறது. இதனால், சுப பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி காணலாம்.

  • 16

    கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

    ஒவ்வொரு கிரகமும் நகர்ந்து கொண்டே இருக்கக்கூடியவை. எனவே தான், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றுகின்றனர். இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அதே நாளில் மேஷ ராசியில் நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் பெயர்ச்சி செய்வதுடன், ஒரு மாத காலம் அங்கேயே உச்சம் பெறுவார். இந்த ஒரு மாத காலத்தை தான் சித்திரை மாதம் என்கிறோம். சித்திரை 1 ஆம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இந்நிலையில், சனி - சூரியன் - புதன் ஒரு ராசியில் இணைவதால், கும்பத்தில் சூரியன் குபேர யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிக்காரர்கள் செல்வம், பண வரவு, நல்ல ஆரோக்கியம் என பல நன்மைகளை பெறுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 26

    கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

    குபேர யோகம் :​ சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி செய்யக்கூடிய நிலையில், அங்கு புதன் சஞ்சாரம் செய்வதால் புதாதித்திய யோகம் உருவாகிறது. அதைத் தொடர்ந்து குரு எனும் சுப கிரகம் பெயர்ச்சி ஆகிறது. மேஷத்தில் ஏற்கனவே சஞ்சரித்து அரும் ராகுவால் குரு சண்டாள யோகம் உருவாகும். இப்படிப்பட்ட அற்புதங்கள் நிறைந்த கிரக நிலைகளைக் கொண்ட சித்திரை மாதத்தில் சூரிய குபேர யோகம் உருவாக உள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்றாலும், சில ராசியினருக்கு கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும். அப்படி, சூரியன் குபேர யோகத்தால் சுப பலன்களை பெற இருக்கும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

    மேஷம் : மேஷ ராசியில் சூரிய பகவான் கிரக உச்ச நிலை பெறுவதால், உங்களுக்கு சுப பலன்கள் அதிகமாக கிடைக்கும். உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்களின் வேலையில் மேன்மை உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் புதிய திட்டங்கள் உங்கள் வேலையில் மேன்மை தருவதாக இருக்கும். உங்களின் நிதி நிலைமையில் முன்னேற்றம் கிடைப்பதாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

    MORE
    GALLERIES

  • 46

    கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

    விருச்சிகம் : விருச்சிக ராசிக்கு இந்த மாதத்தில் பல சுப பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க சாதகமான காலமாக இருக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும், வருமானம் உயரும் என்றாலும், உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உங்களின் புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

    தனுசு : தனுசு ராசிக்கு புண்ணிய ஸ்தானத்தில் ஆத்ம காரகனின் சஞ்சாரம் நிகழ்வதும், அடுத்தடுத்து ஏற்படும் கிரக சேர்க்கை பல வகையில் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தருவதாக இருக்கும். இதனால், உங்களுக்கு நல்ல நிதி மேன்மை உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் சாதக சூழல் இருக்கும். வியாபாரம், தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வகையில் சாதகமான சூழல் நிலவும்.

    MORE
    GALLERIES

  • 66

    கும்பத்தில் இணையும் சனி - சூரியன் - புதன்… இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்!

    மீனம் : மீன ராசிக்கு சூரியனின் சஞ்சாரம் பல வகையில் சிறப்பான பலன்கள் தருவதாக இருக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும். உங்களின் முதலீடுகள் மூலம் நல்ல லாபம் இடைக்கும். லட்சுமி தேவியின் அருளைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கடன் பிரச்னைகள் தீர வாய்ப்புகள் உள்ளது.

    MORE
    GALLERIES