முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » கும்பம் டூ மீனம்.. இன்று சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்...!

கும்பம் டூ மீனம்.. இன்று சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்...!

sukran peyarchi | ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அது பல சுப யோகங்களுடன் ராஜயோகத்தையும் உருவாக்குகிறது.

  • 14

    கும்பம் டூ மீனம்.. இன்று சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்...!

    கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் ஆடம்பரம், காதல், செல்வம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் இருந்து பிப்ரவரி 15 ஆம் தேதியான இன்று முதல் உச்சம் பெறும் ராசியான மீன ராசிக்கு செல்கிறார். மீன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைப் பெறப் போகிறார்கள். இப்போது மீனம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். காண்போம்.

    MORE
    GALLERIES

  • 24

    கும்பம் டூ மீனம்.. இன்று சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்...!

    ரிஷபம்: ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது நல்ல வருமானத்தை பெற்றுதரும் இடமாகும். இதனால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தில் நல்ல லாபத்தை பெறுவதோடு, முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் இக்காலத்தில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 34

    கும்பம் டூ மீனம்.. இன்று சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்...!

    கன்னி: கன்னி ராசியின் 7 ஆவது இடத்திற்கு சுக்கிரன் செல்கிறார். இது திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இதனால் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் உதவியால் நல்ல பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு வணிகம் செய்பவர்கள் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவார்கள். சுக்கிரன் இந்த பெயர்ச்சியால் மாளவிய ராஜயோகத்தை உருவாக்குவதால், திடீரென்று பணம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 44

    கும்பம் டூ மீனம்.. இன்று சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்...!

    கும்பம்: கும்ப ராசியின் 2 ஆவது இடத்தில் சுக்கிரன் செல்கிறார். இது செல்வத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் திடீரென்று பணம் உங்களைத் தேடி வரும். வணிகர்ளுக்கு இந்த காலகட்டமானது நல்ல லாபத்தை தரும். குறைவான செலவில் அதிக லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் பேச்சால் மற்றவர்களின் மனதை எளிதில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக இக்காலத்தில் சிக்கிய பணம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES