முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு 02 -ம்தேதி அதிகாலை 4.45மணிக்கு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நேற்றையதினம் நம்பெருமாள் தீர்த்தவாரியும் வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றதுடன், இராப்பத்து திருநாளின்போது 9-நாட்கள் தினசரி திறக்கப்பட்டுவந்த பரமபதவாசலும் நேற்று இரவு 10 மணியுடன் மூடப்பட்டது.