கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த, 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரைத் தேர் திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை உற்சவர் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளினார். தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
தஞ்சை களிமேடு தேர்த் திருவிழா விபத்து எதிரொலியாக, தேரோடும் வீதிகளில், காலை, 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. தேர் நிலையை சென்றடைந்த பிறகே மின்சாரம் வழங்கப்பட்டது.திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், தேரோடும் வீதிகள் மட்டுமல்லாது, ஸ்ரீரங்கம் முழுவதும், 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.