கும்பகோணம்: ஸ்ரீ அம்புஜவள்ளி தாயார் சமேத மணிக்குன்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
Tanjore: தஞ்சை வெண்ணாற்றங் கரையில் எழுந்தருளி இருக்கும் 108 வைணவ தலங்களால் ஒன்றான ஸ்ரீ அம்புஜவள்ளி தாயார் சமேத மணிக்குன்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை வெண்ணாற்றங் கரையில் அருள்மிகு அம்புஜ வள்ளி தாயார், சமேத ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ கோவிலில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது.
2/ 5
18ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை தொடங்கியது. இன்று நான்காம் கால யாக பூஜை பூரணாகதியுடன் நிறைவடைந்தது. யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைப் பெற்றது.
3/ 5
மங்கள வாத்யங்கள் இசைக்க, கோவிந்தா கோஷமிட்டு சிவச்சாரியர்கள் புனித நீரை தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலை வளம் வந்தனர்.
4/ 5
புனித நீர் தாயர் சன்னதி மற்றும் மூலவர் சன்னதி கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
5/ 5
அங்கு கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன அப்போது கூடி நின்ற ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டன.