இன்றைய காலக்கட்டத்தில் வீடுகளில் மரம், செடிகளை வளர்ப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, மரங்களும் செடிகளும் வீட்டின் வளிமண்டலத்தை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டுவரும் சில தாவரங்களை வீட்டில் வைப்பது நல்லது.
வாஸ்துப்படி வீட்டில் நிதிநிலையை அதிகரிக்க என்ன செடி வைக்கலாம் என யோசித்தால், நம் நினைவுக்கு வருவது மணி பிளாண்ட் மட்டும் தான். ஆனால், மணி பிளாண்டை விட இருமடங்கு நன்மைகளை வழங்கும் செடி பற்றி தெரியுமா?. அது ஸ்பைடர் செடி தான். இந்த அழகான செடி பெரும்பாலான வீடுகளில் நடப்படுகிறது. இந்த செடியை வீட்டில் நடுவது நேர்மறை ஆற்றலை கொண்டு வருவது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் நன்மை கொடுக்கும்.
ஸ்பைடர் செடியின் நன்மைகள் : தற்போது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடு, பணியிடத்தில் அழகுக்காக மணி பிளாண்ட் செடிகளை வளர்ப்பார்கள். உண்மையில் இவை, நம் கண்களுக்கும், மனதிற்கும் ஒருவித நிறைவை தருகின்றனர். அதோடு, அவை வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலையும் விரட்டுகிறது. குறிப்பாக ஸ்பைடர் செடி அதை சுற்றியுள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி அதிகம் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இதனால், நமக்கு தூய்மையான ஆக்ஸிஜன் கிடைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. ஸ்பைடர் செடியை வீட்டிற்குள் வைப்பதால், மன அழுத்தம் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதை வீட்டில் சரியான இடத்தில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனையை கூட தவிர்க்கலாம்.
ஸ்பைடர் பிளாண்ட் வைக்க வேண்டிய திசை : வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் சிலந்தி செடியை நட்டு வளர்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், வீட்டிலிருந்து எதிர்மறை நீங்கும். நேர்மறை ஆற்றலால் நிதி நிலை மேம்படுவதுடன், லாபமும் அதிகரிக்கும். வீட்டில் எப்பேர்ப்பட்ட வாஸ்து தோஷம் இருந்தாலும் இது நீக்கிவிடும். இந்த செடியை தெற்கு மற்றும் மேற்கு திசையில் நடாமல் பார்த்துக்கொள்ளவும். அதே போல செடியை காய்ந்து போக விடாதீர்கள். அப்படி காய்ந்தால், வீட்டிலிருந்து உடனே அகற்றிவிடவும்.
எங்கு வைக்கலாம் ? : இந்த செடியை வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் வைத்து வளர்க்கலாம். இதை வீட்டின் வரவேற்பறை, சமையலறை, பால்கனி, படிக்கும் அறை போன்றவற்றில் வைக்கலாம். வீட்டைத் தவிர, அலுவலகங்கள், கடைகள் மற்றும் பிற வணிக இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். இந்த செடியை குழந்தைகள் அறையிலோ அல்லது சிறு குழந்தைகள் படிக்கும் அறையிலோ வைக்கலாம். இதனால், வீட்டின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் பரஸ்பர அன்பு அதிகரிப்பதுடன், முன்னேற்றமும் அதிகரிக்கும்.
நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : ஸ்பைடர் செடி காய்ந்தாலோ அல்லது ஏதேனும் பிரச்சனையால் இறந்து போனாலோ, அதை வீட்டில் வைக்க கூடாது. உடனே அதை அகற்றிவிட்டு புதிய செடியை நடவும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, சிலந்தி செடியை வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த திசையில் வைப்பது அசுப பலன்களைத் தரும்.