திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. இது தவிர தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கும் இந்திய சுற்றுலா துறைக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னுரிமை அடிப்படையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.