இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ( solar eclipse in 2023 ) ஏப்ரல் 20 ஆம் தேதியான இன்று ஏற்படுகிறது. பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் சூரிய கிரகணம் என்று கூறுகின்றனர். இந்த நிகழ்வின்போது, நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
இன்று ஏற்படும் இந்த கிரகணாம் ஹைப்ரிட் சூரிய கிரகணம் (hybrid solar eclipse 2023) என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணம் காலை 7:04 மணி முதல் மதியம் 12:29 மணி வரை நடைபெறும். இது இந்தியாவில் தென்படாது என்றாலும், ஜோதிடப்படி கிரகணத்திற்குப் பிறகு சில விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டும். இல்லையென்றால் இது கிரகணத்தின் சில மோசமான விளைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் இன்று கிரகணம் முடிந்தவுடன் கட்டயாமாக இந்த 5 விஷயங்களை செய்துவிடுங்கள்...
குளித்தல்: சாஸ்திரங்களின்படி சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி. கிரகணம் முடிந்த உடனே குளிக்கவும். கிரகணத்தின் போது வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதனால் கிரகணம் முடிந்த உடனேயே குளிக்க வேண்டும் என்று அறிவியலாளார்கள் கூறுகின்றனர்.
பூஜை அறையை சுத்தம் செய்தல்: மத நம்பிக்கைகளின்படி, கிரகணத்தின் போது வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மூடி வைக்க வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு பூஜை அறையை திறந்து சுத்தம் செய்ய வேண்டும். கடவுள் சிலைகளையும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிலைகளை வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
தானம்: கிரகணம் ஒரு அசுபமான காலமாக கருதப்படுகிறது. எனவே அதன் பிறகு சில வேலைகளைச் செய்வது நல்லது. அதில் மிக முக்கியமான ஒன்று தானம் செய்வது. தானியங்கள், சமைத்த உணவு, உடைகள் போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். இது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியை அதிகரிக்க செய்யும் என்பது ஐதீகம்.