வரும் மார்ச் 5 ஆம் தேதி சனி கும்பத்தில் உதயமாக உள்ளது. இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்குள் வந்துள்ளார். சனி பெயர்ச்சியடைந்த பின் ஜனவரி இறுதியில் அஸ்தமனமானார். இதையடுத்து, சனி பகவான் மார்ச் 5, 2023 அன்று இரவு 8.38 மணிக்கு கும்பத்தில் உதயமாகிறார். இவரின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிஷ்டத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் நல்ல பலன் கிடைக்கும் என பார்க்கலாம்.
மேஷம் : சனி பகவான் உதயத்தால், மேஷ ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். தொழில் சம்மந்தமாக ஏற்பட்ட போட்டிகள் மற்றும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் செய்யும் அனைத்து வேளையிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்த காலம் பணியாளர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். சனி பகவானின் அருளால், மேஷ ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு உதய சனி சாதகமான பலன்களை கொடுக்கும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவால், தனிப்பட்ட மற்றும் தொழில் சிக்கல்கள் நீங்கும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களின் நற்பெயரும் உயரும். சனி பகவானின் அருளால், முழு குடும்பத்திற்கும் மகிழ்ச்சி பெருகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய தொழில் தொடங்க விரும்பினால், நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் சனி உதிப்பது நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்துடனான உறவுகளும் மேம்படும். சனி மற்றும் சூரியனின் ஆசியுடன் சொந்த தொழிலைத் தொடங்குவீர்கள். மேலும், முழு குடும்பத்தின் ஆதரவையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையுடன் இருந்த மனக்கசப்புகள் தீரும், அவருடைய ஒத்துழைப்போடு பல அரசுப் பணிகள் நிறைவேறும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் சாதகமான காலமாகும். நீங்கள் திருமணத்திற்கு திட்டமிட்டால் சில நல்ல செய்திகளை பெறுவீர்கள்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் உதயம் பல பிரச்சனைகளை நீக்கும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அல்லது வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு நல்ல காலம் இது. குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுங்கள் மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஆனால், அதற்காக நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் நண்பர்களுடன் விடுமுறைக்கு திட்டமிடுவீர்கள் மற்றும் காதல் வாழ்க்கையில் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள்.
கும்பம் : சனி உங்கள் சொந்த ராசியில் வசிக்கிறார் மற்றும் மார்ச் 5 ஆம் தேதி தனது சொந்த ராசியில் உதயமாகும். இக்காலத்தில் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சனிபகவானின் அருளால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் சொத்து அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வியாபாரத்தில் உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் முன்னேற்றம் காணப்படும். சனி பகவானின் அருளால் கும்ப ராசிக்காரர்கள் முதலீடுகளில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.