சனிப்பெயர்ச்சி ஜோதிடத்தின் படி, சனி தேவன் நீதியின் கடவுள் மற்றும் கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர் என்று அறியப்படுகிறார். சனி பகவான் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது.
சனி பகவான் மார்ச் 15 முதல் சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். இத்தகைய சூழ்நிலையில், இந்து பஞ்சாங்கத்தின்படி, சனி தேவன் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷம்: சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழையும் போது சுப பலன்கள் கிடைக்கும். பெயர்ச்சி காலத்தின் போது அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம். சனி இந்த நக்ஷத்திரத்தில் நுழைந்த பிறகு, இந்த ராசிக்காரர்கள் புதிய திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கலாம். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் இந்தக் காலகட்டத்தில் நிறைவேற்றப்படும்.
மிதுனம் : வேலை அல்லது படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இந்த 7 மாதங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். கடந்த ஆண்டு சனியின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. இப்போது அந்த இன்னல்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படும். சனிபகவான் இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களின் பயணங்கள் வெற்றியடையும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்து பொருளாதார நிலை வலுப்பெறும். எதிர்பாராத பண வரவும் நிதி நிலையை உயர்த்தும்
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி, வேலை மாற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். இது தவிர, தொழிலதிபர்களும் இந்த நேரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இது தவிர, வேலை தேடுபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி பண விஷயத்திலும் சாதகமாக இருக்கும்.
துலாம்: இந்த ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைக்கும். உங்கள் வருமான ஆதாரங்களும் அதிகரிக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் நேர்மையாக வேலை செய்ய வேண்டும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். மகர ராசிக்கு அதிபதி சனி. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கினால் அதில் வெற்றி கிடைக்கும்.