தற்போது சனிபகவான் தனது ராசியான கும்பத்தில் 2025 வரை இருப்பார். மார்ச் 15 ஆம் தேதி சனி, சதய நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இவர் அக்டோபர் 17 ஆம் தேதி வரை சதய நட்சத்திரத்தில் இருப்பார். இதனால், சதய நட்சத்திரத்தில் உள்ள சனி 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தருவார். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 6 மாதம் மிக சிறப்பாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் துவங்க நினைத்தால் அக்டோபர் மாதம் வரை இதற்கு சிறந்த காலம். தொழில்முனைவோருக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. மறுபுறம், வேலையில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம் : சனிபகவான் சதய நட்சத்திரத்தில் பிரவேசிப்பது சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அக்டோபர் வரை அற்புதமான பலன்களைத் தரும். நீங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவீர்கள். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்யலாம். புதிய வேலை தேடுபவராக இருந்தால், உங்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.