சனி அஸ்தங்கம் அல்லது அஸ்தமனம் என்றால் என்ன? சூரிய குடும்பத்தில் இருக்கும் பஞ்சபூதங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 5 கிரகங்கள், சூரியனுக்கு ஒரு குறிப்பட்ட பாகை முன் அல்லது பின் இருப்பின் அது அஸ்தமனம் நிலையை அடைகிறது. அஸ்தமனம் அடைந்த அந்த கிரகங்கள் சூரியனிடம் தனது வலிமையை இழந்து பாவத்துவம் அடைகிறது. இந்த பாகை அளவு சூரியன் அந்த கிரகங்களுக்கு குறிப்பிட்ட பாகை அளவில் வரும் போது முழுமையாக அஸ்தமனம் அடையும். அந்த நிலையில் அஸ்தமனம் அடைந்த அந்த கிரகம் தனது ஆதிபத்திய வலுவை இழந்து, வெறும் காரகத்துவத்தை மட்டுமே தரக்கூடியதாக இருக்கும்.
கும்பம்: மனதில் குழப்பம் இருக்கும். மனதில் எதிர்மறையான எண்ணம் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் அதிக உழைப்பு இருக்கும். நண்பருடன் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானம் தேவை.
மீனம்: மனதில் குழப்பம் இருக்கும். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். மன அமைதிக்கு முயற்சி செய்யுங்கள். பேச்சில் கடுமையின் தாக்கம் அதிகரிக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும், ஆனால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.