ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இவற்றின் இயக்கங்களின் அடிப்படையில்தான் நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே எந்த ஒரு கிரகம் அதன் நிலையை மாற்றினால் அது நம்மை பாதிக்கும். கடந்த மே 10 ஆம் தேதி செய்வாய் மற்றும் சனி சேர்க்கையால் மிகவும் மோசமாக கருதப்படும் ஷடாஷ்டக யோகம் உருவானது.
நவகிரகங்களில் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் மே 10 ஆம் தேதி பலவீனமான ராசியான கடக ராசிக்குள் நுழைந்தார். சனியும், செவ்வாயும் 6 மற்றும் 8 ஆம் வீட்டில் இருக்கும் போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. செவ்வாய் கடக ராசியில் ஜூலை 01 ஆம் தேதி வரை இருப்பார். எனவே, குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் ஜூலை மாதம் வரை இருக்கும். சனி செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான மற்றும் பல பிரச்சனைகளை தரக்கூடும். ஷடாஷ்டக யோகத்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் ராசிகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சனி மற்றும் செவ்வாய் பெயர்ச்சியால் உருவான ஷடாஷ்டக யோகத்தால் உங்களின் திருமண வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படும். அதிகமான இழப்புகளை சந்திப்பீர்கள். காதல் வாழ்க்கை கடினமானதாக இருக்கும். எதையும் சந்தித்து செயல்படுவது நல்லது.
மிதுனம் : இந்த லக்னத்தின் செல்வ வீட்டில் செவ்வாய் இருப்பதால், பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு முன் 1-க்கு 100 முறை யோசிக்க வேண்டும். புதிய முதலீடுகளில் தலையிட வேண்டாம். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனமாக தேவை, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.