பழைமை வாய்ந்த கோவில் கோபுரங்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் இருக்கின்றன. கோவில்களில் இந்த சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தால் மனம் அலைபாயும். முழு மனமும் தெய்வீகத்துல போகுமா என்பன போன்ற கேள்வி எழதான் செய்கின்றன... பொதுவாக எல்லோரும் கூறும் விஷயம் எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டும் என்றால் காம எண்ணம் தடையாகயிருக்கும். அத்தகைய காமத்தை, காம எண்ணத்தை, குரோதம் கடந்து வந்தாலே இறைவனை அடையலாம் என்பார்கள். ஆனால், இத்தகைய சிலை வடிவங்கள் எதற்காக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன என்பது பலருக்கு வியப்பாக இருக்கும்.
கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள். கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகள் காணப்படுகிறது. ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை
வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன,
கஜுராஹோ கோவிலில் அகன்ற இடை, பெரிய மார்பங்கள் என வளைவு, நெளிவுகளுடன் கந்தர்வ பெண் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் வாரத்தில் இங்கே கஜுராஹோ நடன திருவிழா நடைபெறுகிறது. ஒளியின் வெள்ளோட்டத்தில் இந்த கோவில் மிகவும் அழகான தோற்றத்தில் தெரியும். சுற்றுலா பயணிகள் யாரும் தவறவிட்டுவிட கூடாத விழா இது.
மார்க்கண்டேஸ்வரர் கோவில், மகாராஸ்டிரா: வைங்கங்கா (Wainganga) எனும் ஆற்றின் அருகே அமைந்துள்ளது மார்க்கண்டேஸ்வரர் கோவில். சில வரலாற்று தகவல்களில் இந்த கோவில் தானவர்களால் ஒரே இரவில் கட்டப்பட்டது என்றும் இவர்கள் தீய சக்திகள் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று அதிக எண்ணிக்கையில் மக்கள் இங்கே வந்து சிவனை வழிபட்டு செல்கிறார்கள்.
படவலி கோவில், மத்தியப் பிரதேசம்: மொரீனா மாவட்டத்தின் அருகே சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கிறது இந்த கோவில். இங்கே முன்னர் வழிப்பறிக் கொள்ளையர்கள் தங்கி வந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதன் கோட்டை பகுதியில் பல கவர்ச்சிக்கரமான சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்த இடத்தை சிறிய கஜுராஹோ என்றும் அழைக்கிறார்கள்
கஜுராஹோ கோவிலுக்கு பிறகு அதிக தனிமைப்படுத்தப்பட்ட பிரசித்தி பெற்ற அற்புதமான சிலை வேலைபாடுகள் செய்யப்பட இடம் ஒடிஸாவின் சூரிய கோவில். ஒருவனுக்கு ஒருத்தி, பலதாரமணம், ஓரினச் சேர்க்கை என பல வகையான காதலை வெளிப்படுத்தும் சிலைகள் இங்கே இருக்கின்றன. கோனார்க் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் பெயருக்கு ஒரு அர்த்தம் உண்டு. கோனா என்றால் மூலை என்றும், ஆர்கா என்றால் சூரியன் என்றும் பொருள். இந்த கோவில் பாலுணர்வுவெளிப்படுத்தும் சிலைகள் நிறையவே இருக்கின்றன.
விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்தக் காலக் கட்டத்திலும் கோவில் வழிபாடுகளில் இருந்துதான் கலவியைத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அன்றைய ஊடகம் காமத்தை புரிந்து கொள்ள சிற்பம் என்றிருந்தது. காமத்தை ஊட்ட சினிமா என்கிற அளவில் இன்றைய ஊடகம் வளர்ந்து விட்ட சூழலில் பல்வேறு கலாச்சாரச் சீர்கேடுகள் பெருகி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
எது காதல், எது காமம் என்று இன்றைக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப் பட வேண்டிய கலாச்சாரக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காம உணர்வுகளில் இரண்டு ஒன்றுபட்ட மனங்கள் இணைந்து பங்கு கொள்ள வேண்டும். மன ஒற்றுமை இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலும் பயனை விளைவிக்காது என்பதைத்தான் இந்த சிற்பங்கள் நமக்கு காலந்தோறும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன எனலாம்.