முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

Saturn Retrograde In Aquarius 2023 | கும்ப ராசியில் சனியின் பிற்போக்குநிலை ஜூன் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. கிரகத்தின் பிற்போக்கு இயக்கத்தின் காரணமாக நம் வாழ்வில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதே இதன் பொருள்.

 • 16

  சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

  ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெயில் ஒரு ராசியில் ராசிக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். வேத ஜோதிடத்தில் "சனி" என்று அழைக்கப்படும் சனி பகவான் நவ கிரகங்களில் மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். நீதிகளின் தலைவனாக கருதப்படும் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதாவது, இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்ய இரண்டரை ஆண்டுகள் எடுப்பார். சனி என்ற பெயரை கேட்டாலே நம்மில் பலர் பயப்படுவோம். ஏனென்றால், இவர் மற்றவர்களுக்கு அசுப விளைவுகளை மட்டுமே கொடுப்பார் என்ற என்னை நிலவுகிறது. ஆனால், ஒருவரின் ஜாதகத்தில் சனியின் நிலை நன்றாக இருந்தால் அவர்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு சுப பலன்களை கொடுப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

  MORE
  GALLERIES

 • 26

  சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

  நீதிமான் சனி பகவான் கடந்த ஜனவரி மாதம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசிக்குள் நுழைந்த இவர் சில நாட்களிலேயே அஸ்தமனமானார். இதையடுத்து, மார்ச் மாதம் மீண்டும் அடுத்த நட்சத்திரத்தில் சனி உதயமானார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமாகவுள்ளார். அதாவது, சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி பகவான் நிலையிலேயே நவம்பர் மாதம் வரை காணப்படுவார். டிசம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு நிதி மேன்மை, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டத்தை வழங்குவார். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

  மிதுனம் : உங்களின் 9 ஆம் வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி செய்ய உள்ளார். இதனால், சனி உங்களுக்கு நல்ல பலன்களை வழங்க உள்ளார். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் ஆசை நிறைவேறும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் சற்று மோசமாக காணப்படும். பிரச்சனையில் இருந்த பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அத்துடன், பதவி உயர்வும் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 46

  சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

  சிம்மம் : சனி உங்கள் ராசியின் 7 ஆவது வீட்டில் வக்ரப்பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள், வெற்றிகரமாக நடந்து முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பீர்கள். இவ்வளவு நாள் நீங்கள் செய்த கடின உழைப்புக்கான முழு பலனும் ஜூன் மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

  துலாம் : சனி உங்கள் ராசியின் 5 ஆவது வீட்டில் வக்ரப்பெயர்ச்சி அடைய உள்ளார். கும்ப ராசியில் சனியின் இந்த நிலை உங்களுக்கு நிதி சிக்கல்களை சமாளிக்க உதவும். ஆனால், நீங்கள் வேலையை இழப்பது போன்ற பின்னடைவை நீங்கள் சந்திக்க நேரிடும். இருப்பினும், நீங்கள் திடீரென்று சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், சிறிது நேரம் ஓய்வு எடுத்து பொறுமையாக இருங்கள். நிதி ரீதியாக, நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. காதல் வாழகியில் சற்று குழப்பம் ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  சனி வக்ரப் பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கும் ஜூன் மாதம் டாப் லெவல்தான்!

  தனுசு : சனி உங்கள் ராசியின் 7 ஆவது வீட்டில் வக்ரப்பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், ஜூன் மாதத்திற்கு பின் நீங்கள் எக்கச்சக்கமான நன்மைகளையும், சந்தோஷங்களையும் பெறுவீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கும். நாட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் விரைவில் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் தேர்வில் வெற்றியை பெறுவார்கள். கடின உழைப்பால் உயரங்களைத் தொடுவீர்கள்.

  MORE
  GALLERIES