நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இந்நிலையில், சனி பெயர்ச்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்ய இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். இவர் ஒவ்வொரு ஆண்டும் நான்கரை மாத காலம் வரை பிற்போக்கு நிலையில் இருப்பார், அதாவது வக்ர நிலையில் இருப்பார். இதனால் சில ராசிகளுக்கு மோசமான காலம் ஏற்படும். வரும் ஜூன் 17, 2023 அன்று சனிபகவான் கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இவர், நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையில் இருப்பார். இதனால், சில ராசியினருக்கு அசுப நிகழ்வுகள் ஏற்படலாம். இந்த காலத்தில் எந்த ராசிக்கல் கவனமாக இருக்க வேண்டும் என இந்த தொகுப்பில் காணலாம்.
மேஷம் : சனியின் வக்ர நிலை சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு கடுமையான பாதிப்பை கொடுக்கும். பணியிடத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம். வியாபாரிகளுக்கு பண நஷ்டம் ஏற்படலாம். இது தவிர, சனியின் பிற்போக்கு சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். திருமணமான தம்பதிகளுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். எனவே, வார்த்தைகளை கவனமாக விடுவது நல்லது.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிலையின் தாக்கம் சில எதிர்மறையாக பலனைத் தருவதாக இருக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் உங்கள் வேலை, தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து பாகுபாடுகளை சந்திக்க நேரிடலாம். இந்த மன அழுத்த சூழ்நிலை உண்டாகும். உங்கள் இலக்குகளை அடைய சவாலானதாக இருக்கும்.
கடகம் : கடக ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் சில தீய சகுனங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. உங்களுக்கு அஷ்டம சனி காலமாக இருப்பதால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் பணியிடத்தில் எதிரிகள் உங்கள் பிரச்னைகளைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். எனவே, தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது.
துலாம் : துலாம் ராசிக்கு ஓரளவு நன்மைகளைக் கொடுத்து வந்த சனி பகவான், இந்த சனி வக்ர நிலை காலத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்துவார். பணியிடத்தில் அதிக கவனத்துடன் செயல்படவும். அதே போல தொழில், வியாபாரிகள் தங்களின் செயல்பாடு, திட்டங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும். முதலீடு மற்றும் வியாபாரம் தொடர்பான முடிவுகளில் கவனம் தேவை. உங்கள் பணம் மற்றவர்களிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
கும்பம் : ஏழரை சனியின் மிக பாதகமான ஜென்ம சனி நடந்து வரும் கும்ப ராசிக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியான மேலும் பாதகத்தை தருவதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் இந்த காலத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். சனியின் வக்ர நிலையால் உங்கள் திட்டம், உழைப்புக்கு சரியான பலன் தராமல் போகலாம். வேலையை மாற்ற திட்டமிட்டுள்ளவர்கள் அந்த திட்டத்தை சிறிது காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது.