முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

Saturn Retrograde 2023 : தனது சொந்த ராசியில் சஞ்சரித்துள்ள சனி பகவான் வக்கிர பெயர்ச்சி செய்ய உள்ளார். இதனால், சில ராசிகள் அடுத்த 4 மாதங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். அதாவது, பண வரவு, மகிழ்ச்சி, வேலைவாய்ப்பு என பல சுப பலன்களை பெறுவார்கள். சனியின் சுப பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் என பார்க்கலாம்.

  • 17

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06:03 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி சனி சதயம் நட்சத்திரத்திற்கு மாறினார். இந்நிலையில், வரும் ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியிலேயே சனி வக்ர பெயர்ச்சி செய்ய உள்ளார். அதாவது, கும்பத்திற்கு பிற்போக்குத்தனமாக நகரப் போகிறார். இவர், நவம்பர் 4 வரை பிற்போக்கு இயக்கத்திலேயே இருப்பார். சனியின் இந்த சஞ்சாரத்தால் அடுத்த 4 மாதங்களில் மிதுனம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் தங்கள் செயல்களுக்கு ஏற்ப சுப பலன்களை பெறுவார்கள். சனியின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    மிதுனம் : சனி பகவான் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சனி பிற்போக்கு நிலையில் இருக்கும் ஜாதகருக்கு இந்த சனி பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால், உங்களின் உழைப்புக்கு ஏற்ப வெகுமதியைப் பெறுவீர்கள். தந்தை மற்றும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். குடும்ப வேலை மற்றும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். சுப காரியங்களுக்காக பயணம் செய்ய நேரிடலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    சிம்மம் : சிம்ம ராசிக்கு ஏழாவது வீட்டில் சனி சஞ்சரிக்கிறது. சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் கூடிய விரைவில் முடிவடையும். பல புதிய வாய்ப்புகளால் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 47

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    தனுசு : சனியின் பிற்போக்கு இயக்கம் தனுசு ராசியினருக்கு திடீர் ஆதாயத்தைத் தரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். பணியாளர்கள் சக ஊழியர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பைப் பெறுவார்கள். மேலும், அவர்களின் உழைப்பின் பலனையும் அறுவடை செய்வார்கள். சனியின் பிற்போக்கு சஞ்சாரம் மாணவர்களுக்கு மிகவும் நல்லது. இக்காலத்தில் கல்வித்துறையில் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு, சனியின் பிற்போக்கு இயக்கம் இரண்டாவது வீட்டில் நிகழ்கிறது. இதனால், உங்கள் நிதி நிலை பலப்படும். நீங்கள் உங்களது சொத்தை விற்க நினைத்தால், அதற்கு மிகவும் சிறந்த காலம் இது. மகர ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் மற்றும் வீட்டில் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். இதைப் பார்த்தால் உங்கள் மனமும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    மீனம் : மீன ராசிக்காரர்களுக்கு பன்னிரண்டாம் வீட்டில் சனியின் பிற்போக்கு சஞ்சாரம் நிகழும். அத்தகைய சூழ்நிலையில், வேலைக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சனியின் பிற்போக்கு இயக்கம் வணிகர்களுக்கு குறிப்பாக பலனளிக்கும். அவர்களின் தொழிலில் வளர்ச்சி காணப்படும். மொத்தத்தில் சனி பகவானை ராசிநாதனாக கொண்டவர்கள், இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் பெற்று வெற்றி பெறுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    சனி வக்கிர பெயர்ச்சி 2023 : ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

    சனி வக்கிர நிலை நடைபெறும் தேதிகள் : 2023 அக்டோபர் 17 ஆம் தேதி சனி வக்ர நிலையில் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதையடுத்து, 2023 நவம்பர் 4 ஆம் தேதி நண்பகல் 12:45 மணி முதல் சனி வக்ர நிவர்த்தி அடைந்து அவிட்ட நட்சத்திரத்தில் மீண்டும் நேர்கதியில் பெயர்ச்சியை தொடங்குவார். 2023 நவம்பர் 22 ஆம் தேதி காலை 7.39 மணி முதல் சனி பகவான் கும்ப ராசியில் உள்ள சதய நட்சத்திரத்திற்கு மாறுவார்.

    MORE
    GALLERIES