உங்கள் கடின உழைப்பு மற்றும் கர்மாவின் அடிப்படையில் பலன்களைத் தரும், சவால்களை ஏற்படுத்தும், கடினமான காலங்களை எதிர்கொள்ள வைக்கும் கிரகங்களில் முதன்மையானது சனி. இந்த ஆண்டில் கும்பம் மற்றும் மகரம் என்று இரண்டு சொந்த ராசிகளிலும் சஞ்சரிக்கும் சனி, தற்போது கும்ப ராசியில் வக்கிரமாகிறார். ஜூன் 5, 2022 முதல் வக்கிரமாகும் சனி, ஒவ்வொரு ராசிக்கும் அசாதாரண மாற்றங்களைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
துலாம் ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: மாற்றங்கள் இல்லாத காலம்
சனி வக்கிரமாகும் காலத்தில், பெரிய முன்னேற்றங்களும் இருக்காது, பின்னடைவுகளும் இருக்காது. நிதி சார்ந்த விஷயங்களில் எந்த விதமான அவசர முடிவுகளும் எடுக்காதீர்கள். வேலை, வியாபாரம் போன்றவற்றில் உங்கள் கடின உழைப்பையும், முயற்சியையும் கைவிடாதீர்கள்.
விருச்சிக ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: குடும்பத்தில் கூடுதல் கவனம் தேவை
உங்கள் உடல் நலம் மட்டுமல்லாமல், குடும்பத்தினரின் உடல் நலம், ஆரோக்கியம் மற்றும் இணக்கமான சூழல் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படலாம். வீட்டில் ஏதேனும் பிரச்சனையால் அமைதியின்மையை உணரலாம். அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை, சொத்துக்கள் வாங்குவது விற்பது, புதிய வணிகம் அல்லது முதலீடு ஆகியவற்றை வக்கிர சனியின் காலம் முடியும் வரை தள்ளிப்போடவும்.
தனுசு ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: பணிச்சுமை அதிகரித்தாலும், அடுத்தடுத்த முன்னேற்றம்
இந்த வக்கிர சனியின் காலம் உங்கள் வாழ்வில் பல விதமான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரப்போகிறது. வேலையில், வணிகத்தில், தொழிலில் உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரத் தொடங்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வி உங்களைத் தேடி வரும். கூடுதல் பணிச்சுமையாக இருந்தாலும், நீங்கள் விரும்பிய வளர்ச்சி பாதையில் செல்வீர்கள்.
கும்பம் ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: சவாலான காலம்
ராசியிலேயே வக்கிரமாகும் சனியால் கும்ப ராசியினருக்கு இது கொஞ்சம் சவாலான காலம் என்றே கூறலாம். வேலை, பார்ட்னர்ஷிப், வாழ்க்கைத்துணை, ஆகியவற்றில் திடீரென்று பிரச்சனையை, அழுத்தத்தை உணரலாம். அவசர முடிவுகள் எடுக்கக்கூடிய காலம் அல்ல. உங்கள் மன அமைதியை பாதிக்கும் படியாக என்ன நடந்தாலும், நிதானமாக இருப்பது அவசியம்.
மீனம் ராசிக்கு வக்கிர சனியின் பலன்கள்: செலவுகள் அதிகரிக்கும்
ஏழரை சனியின் தொடக்கத்தில், வக்கிர சனி காலத்தில் மீன ராசியினருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குறிப்பாக, மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு பணத்தை இழக்காதீர்கள். பணம் செலவு செய்வதில் கூடுதல் கவனம் தேவை.