ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்படி மாறும் போது, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் ஒரே இடத்தில் சந்திக்கும். இப்படி சந்திப்பதால் பல்வேறு யோகங்கள் உருவாகும். அது சுப பலன்களை தருவதாகவும் இருக்கலாம் அல்லது அசுப பலன்களை தருவதாகவும் இருக்கலாம். அந்த யோகத்தால் ஒவ்வொரு ராசியும் பாதிக்கப்படும். எனவே தான், ஜோதிடத்தில் கிரகண மாற்றம் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கடகம் : கடக ராசியின் 8 ஆவது வீட்டில் விஷ யோகமானது உருவாக உள்ளது. எனவே, உங்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே, கடக ராசிக்கு சனியின் தாக்கம் இருப்பதால், எந்த ஒரு புதிய வேலைகளையும் துவங்க வேண்டாம். இல்லையெனில், இழப்புக்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.
கன்னி : கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகிறது. இதனால், நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்கக்கூடும்.அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கால கட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் : விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் விஷ யோகம் உருவாகவுள்ளது. இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் மனம் சற்று அமைதியற்று இருக்கும். உங்களுக்கு சனியின் தாக்கம் இருப்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. பண விஷயத்தில் அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.