ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. இந்த பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நடைபெற்றது என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல வாக்கியப் பஞ்சாங்கப்படி மார்ச் மாதம் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இருந்தாலுமே, சனிப்பெயர்ச்சி நடப்பதற்கு 48 நாட்களுக்கு முன்பே அதற்குரிய பலன்களும், தாக்கங்களும் தெரிய ஆரம்பித்துவிடும் என்ற ஐதீகம் இருக்கின்றது. அதேபோல 48 நாட்களுக்கு முன்பே அந்தந்த ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும் அவரவர்க்கு உரிய தெய்வங்களை வழிபடுவது என்ற வழக்கமும் தொடங்கியிருக்கின்றது. சனிபெயர்ச்சிக்கு 12 ராசிகாரர்களும் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து தற்போது பார்க்கலாம்.