முகப்பு » புகைப்பட செய்தி » சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

சனி பகவானை மகிழ்விக்க சனி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த ஆண்டு சனி ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், அம்மாவாசை நாளில் சனி ஜெயந்தி உருவாவதால், ராஜ யோகமும் இதனுடன் உருவாகிறது. சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நிறைய நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

  • 16

    சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

    இந்து நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டும் வைஷாக் மாத அமாவாசை அன்று, கர்மாவைக் கொடுப்பவரும், சூரியனின் மகனும், நீதியின் தலைவனுமான சனியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி இன்று ( 19 மே 2023 ) கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. சனி பகவான் மக்களுக்கு அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சுப அல்லது அசுப பலன்களை தருவார். அதே போல சனி ஜெயந்தி நாளில் பல அரிய மற்றும் மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நன்மையை பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

    சனி ஜெயந்தி அன்று சுப ராஜயோகம் : மே 19 ஆம் தேதி அமாவாசை திதியில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வேத ஜோதிடத்தின்படி, இந்த முறை சனி ஜெயந்தி அன்று “ஷோபன அல்லது சோபனம் யோகம்” உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஷோபனா யோகா மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிட நேரப்படி, ஷோபன யோகம் மாலை 06:16 மணி வரை நீடிக்கும். மேலும், சனி ஜெயந்தி அன்று சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கும் போது ஷச ராஜயோகத்தை உருவாக்குகிறார். மறுபுறம், மேஷ ராசியில் வியாழனும் சந்திரனும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கும். இந்த யோகங்கள் உருவாவதால் இம்முறை சனி ஜெயந்தி அதிக முக்கியத்துவம் பெறும்.

    MORE
    GALLERIES

  • 36

    சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

    மேஷம் : சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாவது வீட்டில் அதாவது ஜாதகத்தின் முதல் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இதனால், நல்ல லாபம் தரும் வேலையைச் செய்வீர்கள். சனியின் அருளால் இந்த நேரத்தில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலையும், நண்பர்களிடையே ஒத்துழைக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்கள் இந்த காலங்களில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வங்கி மற்றும் இயந்திர வேலை சம்பந்தப்பட்டவர்கள் புதிதாக ஏதாவது செய்யலாம். இந்த நேரத்தில் உங்கள் பெரியவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.

    MORE
    GALLERIES

  • 46

    சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

    மிதுனம் : மிதுன ராசியினருக்கு சனி ஜெயந்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தற்போது ஒன்பதாம் வீட்டிலும், வியாழன் பதினொன்றாமிடத்திலும் சஞ்சரிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். பதவி உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கான நல்ல சூழ்நிலை உருவாகும். சனி தேவரின் சிறப்பு ஆசிகள் உங்கள் மீது இருக்கும். அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவுடன், நீங்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 56

    சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

    சிம்மம் : சனி ஜெயந்தி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதே சமயம் கஜகேசரி யோகத்தால் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குடும்ப மகிழ்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள், இது உங்கள் நிதி நிலைமையை முன்பை விட சிறப்பாக செய்யும்.

    MORE
    GALLERIES

  • 66

    சனி ஜெயந்தி அன்று உருவாகும் மங்கள யோகம்… இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்!!

    கன்னி : கிரக சேர்க்கையால் உங்கள் ராசியில் ஷஷராஜ யோகம் உருவாகிறது. மேலும், மேஷ ராசியில் கஜகேசரி யோகம் உருவாகியுள்ளதால், சனி ஜெயந்தி உங்களுக்கு நன்மை பயக்கும். உங்களின் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிப்பால் தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும்.

    MORE
    GALLERIES