உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் தமிழ் மாதமான சித்திரை, மலையாள மாதமான விஷு சிறப்பு பூஜைகளுக்காக, வரும் பத்தாம் தேதி நடை திறக்கப்படுகிறது.
2/ 5
அன்றைய தேதி முதல் பிரசாதங்களின் விலை மற்றும் அனைத்து வகையான பூஜைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
3/ 5
அதன்படி, 1, 15,000 ரூபாயாக இருந்த படி பூஜைக் கட்டணம் 1,37,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உதயாஸ்தமன பூஜை கட்டணம் 50,000 ரூபாயிலிருந்து 61,800 ஆகவும், தங்க அங்கி சார்த்துதலுக்கான கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
4/ 5
மேலும் புஷ்பாபிஷேகம், சதகலசம் பூஜைக்கான கட்டணம் 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உற்சவ பலி பூஜைக்கான கட்டணம் 30,000 ரூபாயிலிருந்து 37,500 ரூபாயாகிறது.
5/ 5
பிரசாதங்களைப் பொறுத்தவரை, 100 மில்லி அபிஷேக நெய்யின் விலை 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரவணையின் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஒரு பாக்கெட் அப்பம் 35 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.