ஸ்ரீ ராமநவமி விழா 2023 ம் ஆண்டில் மார்ச் 30 ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31 ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. அதனால் மார்ச் 30 ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராமநவமியின் போது சிறப்பு யோகங்கள் உருவாகும், இது சில ராசிக்காரர்களுக்கு பெரிதும் பலன் தரும். அவர் வாழ்வில் புதிய ஒளி உதயமாகும் என்று கூறப்படுகிறது.