வேத ஜோதிடத்தில், ராகு பொதுவாக ஒரு தீய கிரகமாக கருதப்படுகிறது. நமது மனநிலையைப் பாதிக்கும் கிரகமான இது ஜாதகத்தில் பலவீனமான நிலையில் இருந்தால் மட்டுமே மோசமான பலனைத் தரும். அதனால் தான் ராகு பெயரைக் கேட்டாலே மக்கள் பயப்படுகிறார்கள். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதாவது உங்களின், பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படலாம்
இருப்பினும், ராகு எப்போதும் மோசமான பலன்களைத் தருவதில்லை. ஜாதகத்தில் வலிமையான நிலையில் இருந்தால், ஒருவர் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் அடைவார். இந்நிலையில், சனியை பின்தொடரும் ராகு இந்த ஆண்டு அக்டோபர் 30 வரை, செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசியில் இருப்பார். அக்டோபர் 30 ஆம் தேதி, பிற்பகல் 2:13 மணிக்கு, ராகு மேஷ ராசியிலிருந்து வெளிவந்து, பிற்போக்கு இயக்கத்தில் வியாழன் ஆட்சி செய்யும் மீனத்தில் நுழைகிறார். ராகு பெயர்ச்சியால் எந்த ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
மேஷம் : 2023 அக்டோபரில் ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் வக்கிர பெயர்ச்சி செய்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த ராகு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். நீங்கள் குறிப்பாக பண பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும் மற்றும் வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. சமூகத்தில் நல்ல மரியாதை அதிகரிக்கும்.
கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த ராசி மாற்றம் பல நன்மை கொடுக்கும். இந்த நேரத்தில் தொழிலில் லாபம் கிடைக்கும். அதுமட்டுமின்றி புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். ராகு சஞ்சார காலத்தில் தடைபட்ட வேலைகள் முடியும்.
மீனம் : மீன ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதி முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்த காலக்கட்டத்தில் கடன்களையும் திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.