முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

நிழல் கிரகங்களான ராகு - கேது பெயர்ச்சியின் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.அசுப கிரகங்களாக இருந்தாலும், அதன் அமைப்பு சில ராசியினருக்கு மிகவும் நல்ல பலனை தரும்.

  • 18

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டும் முக்கியமான கிரகங்கள். அவை சந்திரனின் வடக்கு மற்றும் தெற்கு முனை என்றும் அழைக்கப்படுகிறது. நிழல் கிரகங்களான இவை கர்ம தாக்கங்களின் வலுவான குறிகாட்டிகளாகக் கருதப்படுகின்றன மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் தான், மக்கள் இந்த இரண்டு கிரகங்களின் பெயரை கேட்டதும் பயக்கின்றனர். வேத ஜோதிடத்தில் இரண்டு கிரகங்களும் அசுபமானதாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம்.

    MORE
    GALLERIES

  • 28

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும், அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களை கொடுக்கும். இந்த கிரகங்களோடு சேரக்கூடிய மற்ற கிரகங்களைப் பொருத்தும் அதற்கான பலன்கள் மாறுபடும். ராகு - கேது மற்ற கிரகங்களின் பலத்தை தனதாக்கிக் கொண்டு பலன் தரக்கூடியவை. அந்த வகையில் சில ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றமும், அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு ராகு - கேது பெயர்ச்சியால், அதிஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி காணலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது : ராகு கேது பெயர்ச்சி கடந்த ஆண்டு, ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சி செய்தனர். இதையடுத்து, இந்த ஆண்டு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    MORE
    GALLERIES

  • 48

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    ராகு - கேது பெயர்ச்சி அக்டோபர் 30, 2023 அன்று நடைபெற உள்ளது. இவை எப்போதும் பின்னோக்கி நகரக்கூடிய கிரகங்கள். அந்தவகையில், ராகு, குருவின் சொந்த ராசியான மீன ராசியிலும், புதன் ஆளும் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர். அசுப கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என ராகு கேதுவை அழைத்தாலும், அவை அமர்ந்துள்ள ராசி மற்றும் அவற்றுடன் சேரக்கூடிய கிரகங்களைப் பொறுத்து நல்ல அல்லது அசுப பலன்கள் மாறுபடும்.

    MORE
    GALLERIES

  • 58

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    மிதுனம் : மிதுன ராசிக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் அக்டோபரில் ராகு சஞ்சரிக்கிறார். இதனால் இந்த ஆண்டு உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதே சமயம் பெரியளவில் சில செலவுகளும் வரக்கூடும். தொழில் மற்றும் வணிக ரீதியில் உங்களின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமான உயர்வுக்கு சாத்தியம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 68

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    கடகம் : ராகு கடக ராசிக்கு 10 ஆம் வீடான கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்கள் வேலை, தொழில், குடும்பம் அனைத்திலும் சில பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் சிலரின் உடல்நிலை மோசமாக இருக்கும் என்பதால் மனம் பதற்றமான சூழலுடன் இருக்கும். அதே சமயம் பண வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. திடீர் பண வரவால் உங்களின் நிதி சுமை, கஷ்டங்கள் தீர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 78

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    விருச்சிகம் : மேஷ ராசியில் ராகு சஞ்சரிக்கக்கூடிய காலம் வரை விருச்சிக ராசிக்கு சாதக நிலை நீடிக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் பனிபோல மறைவார்கள். பணிச்சூழல், தொழில் போட்டிகள், உங்கள் எதிரிகளைக் கூட சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள். மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு திடீரென்று வரலாம்.

    MORE
    GALLERIES

  • 88

    ராகு கேது பெயர்ச்சி 2023 : இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்!

    கும்பம் : கும்ப ராசிக்கு ராகு 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இந்த அமைப்பானது கும்ப ராசிக்கு பல விதத்தில் சாதகமான பலனையே தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு ராகு மிகவும் மங்களகரமான பலனையே தருவார். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி லாப வாய்ப்புகள் உண்டாகும். கல்வி, வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு வாய்ப்புகள் எதிர்பார்ப்பவர்களுக்குச் சாத்தியமாக வாய்ப்புள்ளது. உங்கள் வணிகம் வெளி நாடுகளுடன் தொடர்புடையதாக இருந்தால், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES