பின்னர் அவர் குண்டுதுளைக்காத பிரத்யேக காரில் புறப்பட்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதைத்தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார். அங்கு, மாலை 5.45 மணியளவில் தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்கிறார்.