ஒருவரின் ஆயுளை தீர்மானிக்கக் கூடியவராக இருக்கும் சனி பகவானே, நீதி, நேர்மை, மோட்சம் உள்ளிட்டவைகளுக்கு காரணமானவராக உள்ளார். இவர் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் என்பதால் இந்த நாளை சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். இந்த நாளில் செய்யும் வழிபாடுகள், சனி பகவானின் அருளை பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு சனி ஜெயந்தி வரும் மே 19 ஆம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதியானது மே 18 ம் தேதியான இன்று இரவு 09.42 மணிக்கு துவங்கி, மே 19 ம் தேதி இரவு 09.22 வரை உள்ளது. இந்த நேரத்தில் சனி வழிபாடு செய்வது சனி பகவானின் அருளை பெற்றுத் தரும். நாளை வெள்ளிக்கிழமை.இந்நாளில் சனி பகவானை வழிபாடு செய்தால் ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. மேலும், சனி ஜெயந்தி மற்றும் சனிக்கிழமைகளில் என்னென்ன பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.