முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

மார்ச் மாதத்தில் நான்கு கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுகின்றன. அந்தவகையில், ஜோதிட ரீதியாக மார்ச் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் எந்தெந்த ராசியினருக்கு நல்ல பலனை கொடுக்கும் என பார்க்கலாம்.

 • 16

  மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

  ஜோதிடத்தின் படி கிரகங்களின் மாற்றம் மனிதனின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் 4 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்ற உள்ளது. அடுத்த மாதம் 12 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியிலும், 13 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியிலும், மார்ச் 15, சூரியன் வியாழனின் ராசியான மீனத்திலும், 16 ஆம் தேதி புதன் மீன ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். அதே நேரத்தில், மார்ச் 31 அன்று, புதன் மீனம் ராசியிலிருந்து மீண்டும் மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்வார். இவர்களின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என இங்கே காணலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

  ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் நிகழ இருக்கும் கிரகங்களின் சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் நிதி நிலை வலுவாக இருப்பதால், தொழில் தொடர்பான சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். நீங்கள் தற்போது பணிபுரியும் இடத்தில், சிறந்த பணிச் சூழலும், உங்களின் பணி செயல் திறனுக்கான புதிய அங்கீகாரமும் கிடைக்கும். இந்த நேரத்தில் சம்பள உயர்வு பற்றிய சில நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். பரிகாரமாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மா லட்சுமி தேவிக்கு தீபம் போடவும்.

  MORE
  GALLERIES

 • 36

  மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

  மிதுனம் : செவ்வாய் இந்த மாதம் உங்கள் ராசியில் நுழைகிறார். அதன் விளைவு உங்கள் வீரத்தையும், ஆற்றலையும் அதிகரிக்கும். அதே போல, உங்களின் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் மற்றும் இந்த நேரத்தில் எடுக்கும் தொழில் முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதம் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதில் உதவிகரமாக இருப்பார்கள். மேலும், உங்கள் துணையின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பரிகாரமாக, புதன் கிழமை தோறும் பசுவுக்கு அகத்திக் கீரையை கொடுக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

  கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மார்ச் மாதம் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணிரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளிநாட்டில் பணிபுரியும் உறவினர்களின் உதவியால் வாழ்வாதாரம் சார்ந்த நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். இந்த மாதம் தொழில் செய்யும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பரிகாரமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு கங்கை நீரை பாலுடன் சமர்பிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 56

  மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

  துலாம் : துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதம் கிரகப் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். லக்ஷ்மி அன்னையின் அருள் இந்த ராசியினருக்கு முழுமையாக கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவதால், உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுடன் கிடைக்கும். இந்த நேரத்தில், மாணவர்கள் உயர் கல்விக்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். வணிக வர்க்கத்தினர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும். பரிகாரமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடகிழக்கில் பசு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  மார்ச் மாதம் ராசியை மாற்றும் கிரகங்கள்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது..!

  மீனம் : மீனத்திற்கு இந்த மாதம் நிதி விஷயங்களில் நன்மை பயக்கும். உங்கள் ராசியில் புதன் மற்றும் வியாழன் இணைவதால் இந்த மாதம் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கத்தால் சம்பளத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மறுபுறம், வணிகத்தில் இருப்பவர்கள் அதில் முதலீடு செய்து அதை மேலும் கொண்டு செல்ல நினைக்கலாம். பரிகாரமாக, வியாழன் தோறும் பசுவிற்கு வெல்லம் மற்றும் உளுந்து கலவையை உணவளிக்கவும்.

  MORE
  GALLERIES