Planets transits and Retrograde in Zodiac Signs 2023 | ஜூன் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அந்த வரிசையில், கிரகங்களின் அதிபதியான புதன் ஜூன் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசியில் இருந்து இடம் பெயர்ந்து ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். இதை தொடர்ந்து, கிரகங்களின் தலைவரான சூரிய பகவான் ரிஷப ராசியில் இருந்து ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதற்குப் பிறகு, நீதியின் கடவுளான சனி, ஜூன் 17 அன்று தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். பின்னர், ஜூன் 24 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி செய்வார்.
மாத இறுதியில், கிரகத்தின் தளபதியான செவ்வாய் ஜூன் 30 அன்று சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அந்தவகையில், ஜூன் மாதம் ஏற்படும் கிரக மாற்றத்தால் பல ராசிகளின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த குறைக்க மாற்றத்தால் சுப பலன்களை பெறுவார்கள். உங்களின் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஜூன் மாதம் நிகழும் கிரக பெயர்ச்சியால் எந்தெந்த எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் : ஜூன் மாதம் நிகழும் கிரக பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள் பல சுப பலன்களை பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு வேளையில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களின் ஒவ்வொரு பணியையும் புத்திசாலித்தனமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் புதிய விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மிதுனம் : ஜூன் மாதம் நான்கு பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மிதுன ராசிக்காரர்கள் நல்ல பலனை பெறுவார்கள். மாணவர்களுக்கு இது மிகவும் சிறந்த காலம். சூரியனின் அருளால், நீங்கள் அதிக அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவார்கள் மற்றும் பணம் சம்பாதிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துவார்கள். புதனின் உதவியால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கன்னி : ஜூன் மாதம் நிகழ இருக்கும் நான்கு பெரிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும். மேலும் உங்கள் மனைவியுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் முதலீட்டில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிலம், வாகனம் வாங்க ஏற்ற காலம் இது.
துலாம் : ஜூன் மாதத்தில் நான்கு பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல பெரிய வெற்றியை தரும். இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், பொருளாதார நிலையும் மேம்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், ஒருமுறை சரிபார்க்கவும். புதன் மற்றும் செவ்வாய் காரணமாக, உறவுகளில் இணக்கம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்தக் காலத்தில் சிறப்பாகச் செயல்படுவார்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்பால் பதவி, கௌரவம் கிடைக்கும்.
மகரம் : ஜூன் மாதத்தில் நான்கு பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு நன்மையாக அமையப் போகிறது. உங்கள் துறையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள், ஜூன் மாதத்தில் முடிவுகளை எடுக்கலாம். உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும், மேலும் பணத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அரசு வேலைக்குத் தயாராகும் நபர்கள் நன்கு யோசித்து முன்னேறினால் வெற்றி கிடைக்கும்.