கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது.
2/ 10
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்களில் பெரிய அளவிலான உற்சவங்கள், திருவிழாக்கள் ஆகியவை நடத்தப்படாமல் இருந்தன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் குறிப்பிடத்தகுந்த வகையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
3/ 10
எனவே கோவில்களில் வழக்கம்போல் உற்சவங்கள், திருவிழாக்கள் ஆகியவை நடைபெற துவங்கியுள்ளன.
4/ 10
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டுக்கிடந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது.
5/ 10
5 நாட்கள் நடைபெறும் தெப்போற்சவத்தின் முதல் நாளான நேற்று சீதா தேவி சமேத ராமர், லட்சுமணர் ஆகிய உற்சவ மூர்த்திகள் ஆஞ்சநேயர் உடன் தெப்போற்சவம் கண்டருளினர்.
6/ 10
ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள சுவாமி புஷ்கரணி தெப்பக்குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
7/ 10
முதல் நாளான நேற்று உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் வலம் வந்து தெப்போற்சவம் கண்டனர்.
8/ 10
2-ம் நாளான இன்று ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ருக்மணியுடன் தெப்ப உற்சவம் நடக்கிறது. 3-வது நாளான நாளை ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவியுடன், 4-வது நாள் 5 சுற்றுகளும், 5-வது நாள் 7 சுற்றுகளும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
9/ 10
இந்நிலையில் தெப்ப உற்சவத்தையொட்டி நாளை முதல் வரும் 17-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
10/ 10
திருப்பதியில் நேற்று 65,192 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,592 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.