4 டன் எடைகொண்ட பூக்கள்.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. கலர்ஃபுல் புகைப்படங்கள்!
Vaikunta Ekadashi | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது |
அவருடன் தேவஸ்தான ஜீயர்கள், அர்ச்சகர்கள்,அறங்காவலர் குழுவினர்,தேவஸ்தான உயர் அதிகாரிகள் ஆகியோர் முதலில் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்தனர்.
5/ 14
அதனை தொடர்ந்து உற்சவர்களுக்கு வைகுண்ட வாசலில் தூப தீப நைவேத்திய சமர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.
6/ 14
அதனை தொடர்ந்து அதிகாலை 1.30 மணி முதல் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து 300 ரூபாய் டிக்கெட் வாங்கிய 2000 பக்தர்கள் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு வைகுண்டவாசல் பிரவேசம் செய்தனர்.
7/ 14
பின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள், இலவச தரிசன டோக்கன் வாங்கிய பக்தர்கள் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு வைகுண்ட வாசல் பிரவேசம் செய்தனர்.
8/ 14
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுமார் 4 டன் எடையுள்ள மலர்களால் ஏழுமலையான் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
9/ 14
இது தவிர ஏழுமலையான் கோவில் வளாகம் முழுவதும் கண் கவர் சரவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
10/ 14
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்து ஆகிய அடிப்படை வசதிகளில் தடை ஏற்படாத வகையில் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளது.
11/ 14
இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம் திருப்பதி மலையில் உள்ள கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது.