மலையடிவாரத்தில் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஆடிப்பாடி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.